Friday, June 8, 2012

சமையல் பொடி வகைகள் - மிளகாய் பொடி

இதனை கார பொடி என்றும் கூறுவர்.

எல்லாவிதமான குழம்பு , வறுவல், பொரியல் போன்றவைகளுக்கு அடிபடையானது மிளகாய் பொடி.

மிளகாய் வற்றலை வெய்யிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்து கொள்வதுதான் மிளகாய் பொடி. சிலர் மிளகாயுடன் துவரம்பருப்பு , கடலைபருப்பு சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்வார்கள்.

குழம்பு வகைகளுக்குப் பயன்படும் மிளகாய் பொடியுடன் கொத்தமல்லி விதையையும் சம அளவு சேர்த்து அரைத்துக் கொள்வது வழக்கம்.


Thursday, June 30, 2011

நெய் சாதம்

தேவையான பொருட்கள்:
               புலவு அரிசி
               பச்சை மிளகாய் - 20 
               வெங்காயம் - 50 கிராம் 
               பச்சை கொத்துமல்லி - ஒரு கட்டு 
               பாதாம் பருப்பு - 4 
               பிஸ்தா பருப்பு - 10 
               தேங்காய் ஒரு மூடி
                பட்டை ஒரு துண்டு
                வெங்காயம் - 10 
                கிராம்பு - 10 
                நெய் - 200 மில்லி
                உப்பு தேவையான அளவு 
        அரிசியை ஊற வைத்து கொள்ள வேண்டும்.
         தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.
         பச்சை மிளகாயையும், வெங்காயத்தையும் மல்லி தழையையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
         பாதாம் பருப்பு, பிஸ்தா இரண்டையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
         ஒரு பாத்திரத்தில் நெய்யை விட வேண்டும்.
          நெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு போட்டு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட வேண்டும்.
           அவை வதங்கியதும், அரைத்த பொருட்களை போட்டு சற்று நேரம் கிண்ட வேண்டும்.
           பிறகு அரிசியை போட்டு புரட்டி, தேங்காய் பாலும் நீருமாக இரண்டு லிட்டர் ஊற்றி வேக விட வேண்டும்.     
 

 

பட்டாணி சாதம்

 தேவையான பொருட்கள்:
                  ரவை  -  500 கிராம் 
                  சேமியா  - 500 கிராம் 
                  பச்சை பட்டாணி இரண்டு கரண்டி
                  நெய் ஒரு கரண்டி 
                  கடுகு அரை ஸ்பூன் 
                  பச்சை மிளகாய் மூன்று 
                  உளுத்தம் பருப்பு முக்கால் ஸ்பூன்
                  இஞ்சி சிறு துண்டு
                  எலுபிச்சம் பழம் ஒன்று
                  மஞ்சள் போடி கால் ஸ்பூன்
                  கறிவேப்பிலை சிறிதளவு
                   உப்பு தேவையான அளவு 
        ரவையையும் சேமியாவையும் சம அளவு எடுத்து கொண்டு, அவற்றை நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும்.
        வாணலியில் நெய் விட்டு, முந்திரி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
         பிறகு, பச்சை பட்டாணியை தோல் உரித்து, அதில் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
         நீர் கொதி வந்ததும், ரவை, சேமியா இரண்டையும் போட்டு, நெய் ஊற்றி, கறிவேப்பிலையை கிள்ளி போட வேண்டும்.  கடைசியாக எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு கொள்ள வேண்டும்.
         பட்டாணி சாதத்துடன் ரொட்டி  துண்டுகள் சேர்த்தும் செய்வது உண்டு.  நீர் கொதித்து, ரவை, சேமியாவை போட்டு கிளறும்போது, ரொட்டி துண்டுகளையும், சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

Sunday, June 26, 2011

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:
                   மெல்லிய ரக அரிசி - 500 கிராம் 
                    தக்காளி - 200 கிராம் 
                    தேங்காய் ஒரு மூடி 
                    இஞ்சி சிறு துண்டு
                    பூண்டு 8 பற்கள்
                    சீரகம் ஒன்றரை ஸ்பூன் 
                    வெங்காயம் - 50 கிராம் 
                    பச்சை மிளகாய் ஏழெட்டு
                    பட்டை சிறு துண்டு
                    ஏலக்காய் ஐந்து
                    கிராம்பு ஐந்து 
                    நல்லெண்ணெய் - 100 மில்லி 
                    உப்பு தேவையான அளவு 
         தேங்காயை துருவி பால் எடுத்து கொள்ள வேண்டும்.  தக்காளியை வெட்டி வைத்து கொள்ள வேண்டும். 
          இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.  வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை இலேசாக தட்டி அரைத்து கொள்ள வேண்டும். 
          பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ச்ச வேண்டும். 
           எண்ணெய் காய்ந்ததும், பட்டை, ஏலம், கிராம்பு, ஆகியவற்றை போட்டு பொரிக்க வேண்டும்.  பொரித்தும், அரைத்த பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகத்தை போட்டு வதக்க வேண்டும்.  வாசனை வந்ததும், தக்காளி பழ துண்டுகளை போட வேண்டும்.
           தக்காளி நன்றாக வதங்கியதும், தேங்காய் பாலும், நீருமாக ஒரு லிட்டர் ஊற்றி, அரிசியை போட்டு வேக விட வேண்டும்.

எள்ளு சாதம்

தேவையான பொருட்கள்: 
                     எள்ளு - 250 கிராம்
                     அரிசி - 400 கிராம் 
                     உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன் 
                     மிளகாய் வற்றல் எட்டு
                     பெருங்காயம் கொட்டை பாக்கு அளவு 
                      எண்ணெய் ஒரு கரண்டி
                      நெய்  இரண்டு ஸ்பூன் 
                       பச்சை மிளகாய் ஆறு
                       உப்பு தேவையான அளவு 
           எள்ளு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளை வறுத்து, உப்பு சேர்த்து, நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
           எண்ணெயையும், நெய்யையும் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும். 
           சாதத்தை ஆற வைத்து, அதன் மீது எள்ளு பொடியை தூவி, தாளித்து வைத்துள்ளதையும் கொட்டி கலந்து கொள்ள வேண்டும்.  தாளிக்கும் போது சிறிதளவு கறிவேப்பிலையையும் கிள்ளி போட்டு கொள்ள வேண்டும்.              

மாங்காய் சாதம்

தேவையான அளவு :
                      பச்சரிசி  -  400 கிராம்
                      மாங்காய் துருவல் - 100 கிராம்
                      கடுகு - 10 கிராம்
                      பச்சைமிளகாய் - 10  கிராம்
                      நல்லெண்ணெய் - 100 கிராம்
                      முந்திரி பருப்பு - 15 கிராம்
                      தேங்காய் துருவல் - 50 கிராம்
                       மஞ்சள் தூள் சிறிதளவு
                       காயம் சிறிதளவு
                       உப்பு தேவையான அளவு
        அரிசியை சாதமாக சமைத்து அகன்ற ஒரு தட்டில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும்.
        சாதம் ஆறிய பிறகு, மாங்காய் துருவலை அதில் போட்டு கொள்ள வேண்டும்.
        தேங்காய் துருவலுடன், கடுகு, மிளகாய், உப்பு ஆகியவற்றை மையாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததையும் சாதத்துடன் சேர்த்து, மஞ்சள் தூள் கலந்து, நன்கு கிளறி விட்டு கொள்ள வேண்டும்.
         வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், காயம், கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து சாதத்தில் கொட்டி, நன்கு கிளறி கொள்ள வேண்டும்.
  

Saturday, June 25, 2011

சாம்பார் சாதம்

தேவையான அளவு :
               அரிசி அரை கிலோ அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
               துவரம் பருப்பு   - 125 கிராம் 
               காய்ந்த மிளகாய்  - 10 கிராம்
               கொத்தமல்லி விதை  -  ஒரு தேக்கரண்டி 
               கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
               வெந்தயம் - அரை தேக்கரண்டி
               காயம் - சிறு துண்டு 
               புளி - எலுமிச்சம் பழ அளவு 
               எண்ணெய் - 400 மில்லி அளவு
               கடுகு - அரை தேக்கரண்டி
               உப்பு - தேவையான அளவு 
               கறிவேப்பில்லை கொஞ்சம்.
     துவரம் பருப்பை தனியாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
     மூன்றில் ஒரு பங்கு மிளகாயை எடுத்து வைத்து விட்டு, மிச்சமிருக்கும் மிளகாய், கொத்துமல்லி விதை, கடலை பருப்பு, காயம், வெந்தயம், துவரம் பருப்பு கொஞ்சம் முதலியவற்றை எண்ணெய் விட்டு, வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
      புளியை கரைத்து, அந்த புளி நீரில் பொடி செய்து வாய்த்த மசாலாவை கரைத்து, உப்பும் சேர்த்து, அரிசி - பருப்புடன் கலந்து கொள்ள வேண்டும்.
      எல்லாவற்றையும் ஒன்று சேரும் விதத்தில் நன்றாக கிளறி விட்டு சற்று குழைவாக வேக விட வேண்டும்.  
      வாணலியில் எண்ணெய் விட்டு, மீதி மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாதத்துடன் சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.
       சாம்பார் வெங்காயம் 400 கிராம் அளவு பருப்புடன் சேர்த்து வேக வைத்து கொண்டால், சாம்பார் சாதம் மேலும் ருசியாக இருக்கும்.