தேவையான பொருட்கள்:
ரவை - 500 கிராம்
சேமியா - 500 கிராம்
பச்சை பட்டாணி இரண்டு கரண்டி
நெய் ஒரு கரண்டி
கடுகு அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் மூன்று
உளுத்தம் பருப்பு முக்கால் ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
எலுபிச்சம் பழம் ஒன்று
மஞ்சள் போடி கால் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
ரவையையும் சேமியாவையும் சம அளவு எடுத்து கொண்டு, அவற்றை நெய்யில் வறுத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் விட்டு, முந்திரி பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை போட்டு தாளித்து கொள்ள வேண்டும்.
பிறகு, பச்சை பட்டாணியை தோல் உரித்து, அதில் போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
நீர் கொதி வந்ததும், ரவை, சேமியா இரண்டையும் போட்டு, நெய் ஊற்றி, கறிவேப்பிலையை கிள்ளி போட வேண்டும். கடைசியாக எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு கொள்ள வேண்டும்.
பட்டாணி சாதத்துடன் ரொட்டி துண்டுகள் சேர்த்தும் செய்வது உண்டு. நீர் கொதித்து, ரவை, சேமியாவை போட்டு கிளறும்போது, ரொட்டி துண்டுகளையும், சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment