சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 டம்பளர்
பயற்றம் (பாசி) பருப்பு - கைபிடியால் 1 பிடி
முந்திரி பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் -ஐந்தாறு
நெய் - 1/4 கிலோ
திராட்சை பழம் - 50 கிராம்
தேங்காய் - தேவையான அளவு
முதலில் நெய்காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.
பாசி பருப்பை வாணலியில் போட்டு சிவப்பாக வறுத்து அரிசியில் போட்டு இரண்டு மூன்று தரம் அரிசியை அலம்பி விட்டு பின் 4 டம்பளர் தண்ணீர் விட்டு அதனை குக்கரில் வைத்து மூடி விட வேண்டும். சாதம் வேக வைப்பது போலவே 7 அல்லது 8 விசில் சத்தம் வந்ததும் இறக்கி விட்டு கொஞ்சம் நேரம் கழித்து சாதத்தை எடுத்து அதில் வெல்லத்தை தட்டி போட வேண்டும். 1 உருண்டை ( 1/4 கிலோ அல்லது 1/2 கிலோ) நல்ல சிவப்பு வெல்லமாக பார்த்து வாங்க வேண்டும். பின் அடுப்பில் சாதம் வெல்லம் சேர்த்து பார்த்திரத்தில் வைத்து கிளறி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். 1 டம்பளர் காய்ச்சிய பால் விட வேண்டும். அடுப்பை சின்னதாக வைத்துக் கொள்ள வேண்டும். பொங்கல் கெட்டியாக வந்தவுடன் நெய் விட்டு கிளற வேண்டும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பையும், காய்ந்த திராட்சை பழத்தையும் வறுத்து போட வேண்டும். ஏலக்காய் பொடித்து போட வேண்டும். தேங்காய் பல்லு பல்லாக கீறிபோடலாம்.

No comments:
Post a Comment