Saturday, June 25, 2011

எலுமிச்சம்பழ சாதம்

தேவையான பொருட்கள்

எலுமிச்சம்பழம் - பெரியதாக இருந்தால் - ஒரு பழமும், பாதி பழமும் - சிறிய பழமாக இருந்தால் இரண்டு பழமும்
மஞ்சள் பொடி - இரண்டு சிட்டிகை 
நெய் அல்லது நல்லெண்ணெய்  - 100 கிராம்
கடுகு - ஐந்து கிராம் 
உப்பு - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு  - இருபது கிராம் 
கடலைபருப்பு - இருபது கிராம்
பச்சைமிளகாய் - பத்து கிராம்
கறிவேப்பிலை கொஞ்சம்.

அரிசியை நல்ல பக்குவமாக எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆற விட வேண்டும். 
எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து, உப்பையும் மஞ்சள் பொடியையும் போட்டு சேர்த்து சாதத்தில் கொட்டி கலக்க வேண்டும். 
பிறகு, நெய் அல்லது எண்ணெயை காய வைத்து, கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, இவற்றை போட்டு தாளித்து, பச்சை மிளகாயை வகுந்து போட்டு வதக்கி, சாதத்தில் கொட்டி, நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment