பச்சரிசி 200 கிராம் எடுத்து சாதம் சமைத்து வைத்து கொள்ள வேண்டும்.
சாதத்தில் 200 மில்லி அளவு கெட்டி தயிர், 100 மில்லி அளவு பால் ஆகியவற்றை விட வேண்டும். அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பையும் சேர்க்க வேண்டும்.
நான்கு பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, சிறு மாங்காய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி போட வேண்டும். சிறிது கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட வேண்டும்.
வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 50 கிராம் முந்திரி பருப்பு, சிறிது பெருங்காயம், இரண்டு மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்து, சாதத்தில் கொட்டி, நன்றாக கிளறி வைத்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment