பச்சரிசி 200 கிராம் எடுத்து சாதம் சமைத்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய மூடி தேங்காயை பூ போல துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணெய் விட்டு, ஒரு தேக்கரண்டி கடுகு, நான்கு மிளகாய் வற்றல், ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, சுண்டைகாய் அளவு பெருங்காயம் ஆகியவற்றுடன் தேங்காய் பூவையும் சேர்த்து, எல்லா பொருட்களும் சிவந்து வறுபட்டதும், சாதத்தில் கொட்டி கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment